• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தேர் திருவிழா ரத்து

ByKalamegam Viswanathan

Dec 13, 2024

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு, தேர் திருவிழா நடைபெறும். தொடர் மழையின் காரணமாக தேர் திருவிழா இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக மாற்று ஏற்பாடாக சப்பரத்தில் முருகன் வீதி உலா வந்தார்.

தேர் வீதி ஊர்வலம் வரும் பாதைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கிடப்பதால் தேர் மலையில் சிக்கிக் கொள்ளவாய்ப்புகள் உள்ளதால் தேர் வலம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா வந்தார்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சட்ட தேரோட்டம் நடைபெறுவது வழக்கம் இன்று நடைபெறாத நாள் ஏமாற்றத்துடன் பக்தர்கள் திரும்பினர். அதிகாலையில் இருந்தே கொட்டும் மழையில் சட்டப்பேரவை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தேர்வலம் வராததால் சப்பரத்தில் உள்ள முருகன் தேவனையை வழிபட்டு புறப்பட்டு சென்றனர்.