• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தொடர் மழையால் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

Byவிஷா

Sep 26, 2023

தமிழகத்தில் தொடர் மழையால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (செப்.26) ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு தொடக்க பள்ளி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.