தலைநகர் டெல்லியில் ரூ 1200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், காரில் டெல்லிக்கு போதைப்பொருளை கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், டெல்லியின் காலிண்டி கஞ்ச் பகுதியில் அவர்களை மடக்கிப்பிடித்தனர். முஸ்தபா ஸ்டானிக்சாய், ரஹிமுல்லா ரஹிமி என்ற அந்த இருவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் ஒருவரிடம் இருந்து 1.360 கிலோ, மற்றொருவரிடம் இருந்து சுமார் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மற்றொரு வாகனமும் மடக்கப்பட்டது. அதில் 16 மூட்டைகளில் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மொத்த எடை 311.4 கிலோ ஆகும். இதன் சர்வதேச மதிப்பு 1,200 கோடி ரூபாய் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
