சென்னை வண்டலூரில் கிரெசென்ட் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் ஏராளமானவர்கள் படித்து வருகின்றனர் .
அதேபோல் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் ஓட்டுனராக கண்டிகை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 30 என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார் .

இன்று காலை 7 மணிக்கு தனது பணியை முடித்துவிட்டு வாகனத்தின் சாவி மற்றும் நோட் புத்தகத்தை கல்லூரி வளாகத்தில் உள்ள ட்ரான்ஸ்போர்ட் அறைக்கு வைக்க மணிகண்டன் சென்றபோது பின்னால் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டியதில் தலை கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தன் மகனைப் பார்த்து அவரது தாய் கதறி அழுத காட்சி அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல் கொலை நடைபெற்ற கல்லூரி வளாகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் வெளியே வந்து கொலை செய்தார்களா, அல்லது டிரைவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கொலை நடந்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் குற்றவாளிகளின் கைரேகைகளை சேகரித்து வருகின்றனர்.
கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.