• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேலக்கால் நீர்நிலை பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்..!

ByKalamegam Viswanathan

Apr 3, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான்ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 9 வார்டுகள் உள்ளது இதில் மேலக்கால் கிராமத்தில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் மற்றும் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் சேகரித்து அதை ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் கொட்டாமல் வைகை ஆற்றுபகுதிகளிலும் மயான கரையோர பகுதிகளிலும் மற்றும் மேலக்கால் அருகில் உள்ள கன்மாயில் நீர் நிலை பகுதிகளிலும் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நீர் நிலைகளில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேலக் கால் ஊராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பார்வையிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.