• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுபாடு : ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவலம்..,

ByKalamegam Viswanathan

Jun 26, 2026

திருப்பரங்குன்றம், ஜுன் 26-திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிகுள்ளாகின்றனர். வேறு வழி இன்றி ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளாப்பட்டுள்ளனர்

மதுரைக்குஅடுத்தபடியாக கோவில் நகரம்,வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது. தற்போது கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தும் திருப்பரங்குன்றத்திற்கு உள்ளது. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை சுமார் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக முதற்கட்டமாக கிருதுமால் நதி மையப்படுத்தி விராட்டிபத்தில் ஆற்று படுக்கையில் 9 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பைப் லைன் மூலமாக பசுமலையில் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு அதை பொதுமக்களுக்கு விநியோகப்பட்டது காலப்போக்கில் நிலத்தடி நீர் குறைந்தது அதனால் 1984 -க்கு பிறகு விராட்டிபத்து படுகையில் இருந்து குடிநீர் வரத்து இல்லாமல் போய் விட்டது.

இதனை தொடர்ந்து மாடக்குளம் கண்மாய்கரை, தென் கால் கண்மாய் உள்வாயில் என்று ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டது இதுவும் காலப்போக்கில் கை கொடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில்பன்னியான்விலக்கு சித்தையாபுரத்தில் பேரனை – சிற்றனை ஆற்றுபடுகையில் இருந்து கிணறு (ஆழ்துளை கிணறு) மூலம் மின்மோட்டாரை பயன்படுத்திதண்ணீர் உறிஞ்சப்பட்டு ராட்சகுழாய் வழியாக பசுமலை மூலக்கரையில் உள்ள நீரேற்று நிலைய தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கு இருந்து திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் உள்ள 18 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட ராட்சத தொட்டியில் சேமிக்கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டது இதனையொட்டி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சித்தையாபுரத்தில் இருந்து வைகை தண்ணீரும், முல்லை பெரியாறு குடிநீரும் மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது தற்போது மழை பெய்யவில்லை. வைகையில் போதுமான தண்ணீர் இல்லை இந்த நிலையில் வைகை படுகையில் நிலத்தடி நீர் குறைந்தது. இதனையொட்டி சித்தையாபுரம் பன்னியான் விலக்கில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பன்னியான்விலக்கில் இருந்து குடிநீர் வரத்து நின்றுவிட்டது. இந்த நிலையில் தற்போது முல்லை பெரியாறு கூட்டுகுடி நீர் மட்டுமே செயல்படுவதால் திருப்பரங்குன்றம் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாய்களில்தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்த போதிலும், தற்போது5 நாளைக்கு ஒரு முறை அல்லது வாரத்தில் ஒரு நாள் என்ற நிலை உருமாறி வருகிறது. மாநகராட்சி லாரிகள் மூலம் தெரு தெருவாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. அதுவும் நிறுத்தப்பட்டது. அதனால் தற்போது குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வேறு வழி இன்றி வெளியில்தனியார் மூலம் லாரிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ 15 க்கு வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்குகுடிநீர் வசதி செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். என்றுமுதல் அனமச்சர் ஜோசப் விஜய் கூறி உள்ள நிலையில் அமைச்சர் தொகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டு இருப்பது அமைச்சருக்கு தெரியுமா? என்பது தெரியவில்லை. அமைச்சர் தொகுதியில்குடிநீர் தட்டுபாடு இருப்பதை தெரிந்தும்அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை

இது குறித்து மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலர் கூறும்போது பசுமலை மூலக்கரை நீரேற்று நிலையத்தில் உள்ள ஒரு மின்மோட்டார் அடிக்கடி பழுதாகிறது. அதை சரி செய்து இயக்கிய போதிலும் பழுதாகுவது தொடர்கதையாக உள்ளது. அதற்கு பதிலாக அதிக திறன் கொண்ட மின் மோட்டார் வாங்கி இயக்க வேண்டும். முல்லை பெரியாறு குடிநீரை பம்பிக் செய்வதற்கு (நீரை உறிஞ்சுவதற்கு)பசுமலை நீரேற்று நிலையத்தில் திறன் குறைவான 30 ஹைச்.பி. மோட்டார் தான் செயல்பாட்டில் உள்ளது. அது 24 மணி நேரமும் இயங்கினாலும் திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவில் உள்ள 18 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டதரை மட்ட நீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பாத நிலையாக இருந்து வருகிறது. இதனால் ஒரு புறம் மின்கட்டணம் அதிகரிப்புமும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் சப்ளையும் பாதிக்கிறது. இதை தவிர்க்க 60 ஹைச் பி மோட்டார் பொருத்தப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் தரை மட்ட ராட்ச நீர் சேமிப்பு தொட்டிக்கு என்று நேரடியாக தண்ணீர் சேமிப்பதற்கு தனி லைன் உருவாக்க வேண்டும் மேலும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றம் பகுதியில் தண்ணீர் சேமிப்பதற்கு என்று புதியதாக ராட்ச தொட்டி கட்டப்பட வேண்டும் இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டை ஒரளவுக்கு போக்கலாம் என்றார்.

பாக்ஸ் – 1
குடிநீர் கிடைக்கவில்லை என்று அமைச்சரிடம் பெண்கள் புகார்
திருப்பரங்குன்றம் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற ஒரு விழாவில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான நிர்மல்குமார்கலந்து கொண்டார் அப்போது அவரிடம்அப்பகுதி பெண்கள் கடந்த 4 நாட்களாககுடிநீர் வரவில்லை கூலி வேலை செய்யக்கூடிய பணத்தில் ஒரு குடம் ரூ 15 க்கு குடிநீரை விலைக்கு வாங்க முடியுமா? குடிநீருக்காக யாரை பார்ப்பதற்கு ? எங்கே பார்ப்பது? என்று கேள்வி எழுப்பினர். அதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பெண்களிடம் அமைச்சர் 2 நாளில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றார்.யாபுரத்தில் நிலத்தடி நீர் குறைவால் வைகைகுடி தண்ணீர் வரத்து இல்லை

திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுபாடு : ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவலம்

பொதுமக்கள் அவதி

திருப்பரங்குன்றம், ஜுன் 26-திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிகுள்ளாகின்றனர். வேறு வழி இன்றி ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளாப்பட்டுள்ளனர். மதுரைக்குஅடுத்தபடியாக கோவில் நகரம்,வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது. தற்போது கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தும் திருப்பரங்குன்றத்திற்கு உள்ளது. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை சுமார் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக முதற்கட்டமாக கிருதுமால் நதி மையப்படுத்தி விராட்டிபத்தில் ஆற்று படுக்கையில் 9 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பைப் லைன் மூலமாக பசுமலையில் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு அதை பொதுமக்களுக்கு விநியோகப்பட்டது.

காலப்போக்கில் நிலத்தடி நீர் குறைந்தது அதனால் 1984 -க்கு பிறகு விராட்டிபத்து படுகையில் இருந்து குடிநீர் வரத்து இல்லாமல் போய் விட்டது இதனை தொடர்ந்து மாடக்குளம் கண்மாய்கரை, தென் கால் கண்மாய் உள்வாயில் என்று ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டது இதுவும் காலப்போக்கில் கை கொடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில்பன்னியான்விலக்கு சித்தையாபுரத்தில் பேரனை – சிற்றனை ஆற்றுபடுகையில் இருந்து கிணறு (ஆழ்துளை கிணறு) மூலம் மின்மோட்டாரை பயன்படுத்திதண்ணீர் உறிஞ்சப்பட்டு ராட்சகுழாய் வழியாக பசுமலை மூலக்கரையில் உள்ள நீரேற்று நிலைய தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கு இருந்து திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் உள்ள 18 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட ராட்சத தொட்டியில் சேமிக்கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டது இதனையொட்டி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சித்தையாபுரத்தில் இருந்து வைகை தண்ணீரும், முல்லை பெரியாறு குடிநீரும் மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது தற்போது மழை பெய்யவில்லை. வைகையில் போதுமான தண்ணீர் இல்லை இந்த நிலையில் வைகை படுகையில் நிலத்தடி நீர் குறைந்தது. இதனையொட்டி சித்தையாபுரம் பன்னியான் விலக்கில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பன்னியான்விலக்கில் இருந்து குடிநீர் வரத்து நின்றுவிட்டது. இந்த நிலையில் தற்போது முல்லை பெரியாறு கூட்டுகுடி நீர் மட்டுமே செயல்படுவதால் திருப்பரங்குன்றம் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாய்களில்தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்த போதிலும், தற்போது5 நாளைக்கு ஒரு முறை அல்லது வாரத்தில் ஒரு நாள் என்ற நிலை உருமாறி வருகிறது.

மாநகராட்சி லாரிகள் மூலம் தெரு தெருவாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. அதுவும் நிறுத்தப்பட்டது. அதனால் தற்போது குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேறு வழி இன்றி வெளியில்தனியார் மூலம் லாரிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ 15 க்கு வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்குகுடிநீர் வசதி செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். என்றுமுதல் அனமச்சர் ஜோசப் விஜய் கூறி உள்ள நிலையில் அமைச்சர் தொகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டு இருப்பது அமைச்சருக்கு தெரியுமா? என்பது தெரியவில்லை. அமைச்சர் தொகுதியில்குடிநீர் தட்டுபாடு இருப்பதை தெரிந்தும்அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை

இது குறித்து மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலர் கூறும்போது பசுமலை மூலக்கரை நீரேற்று நிலையத்தில் உள்ள ஒரு மின்மோட்டார் அடிக்கடி பழுதாகிறது. அதை சரி செய்து இயக்கிய போதிலும் பழுதாகுவது தொடர்கதையாக உள்ளது. அதற்கு பதிலாக அதிக திறன் கொண்ட மின் மோட்டார் வாங்கி இயக்க வேண்டும். முல்லை பெரியாறு குடிநீரை பம்பிக் செய்வதற்கு (நீரை உறிஞ்சுவதற்கு)பசுமலை நீரேற்று நிலையத்தில் திறன் குறைவான 30 ஹைச்.பி. மோட்டார் தான் செயல்பாட்டில் உள்ளது. அது 24 மணி நேரமும் இயங்கினாலும் திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவில் உள்ள 18 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டதரை மட்ட நீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பாத நிலையாக இருந்து வருகிறது. இதனால் ஒரு புறம் மின்கட்டணம் அதிகரிப்புமும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் சப்ளையும் பாதிக்கிறது. இதை தவிர்க்க 60 ஹைச் பி மோட்டார் பொருத்தப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் தரை மட்ட ராட்ச நீர் சேமிப்பு தொட்டிக்கு என்று நேரடியாக தண்ணீர் சேமிப்பதற்கு தனி லைன் உருவாக்க வேண்டும் மேலும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றம் பகுதியில் தண்ணீர் சேமிப்பதற்கு என்று புதியதாக ராட்ச தொட்டி கட்டப்பட வேண்டும் இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டை ஒரளவுக்கு போக்கலாம் என்றார்.

பாக்ஸ் – 1
குடிநீர் கிடைக்கவில்லை என்று அமைச்சரிடம் பெண்கள் புகார்
திருப்பரங்குன்றம் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற ஒரு விழாவில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான நிர்மல்குமார்கலந்து கொண்டார் அப்போது அவரிடம்அப்பகுதி பெண்கள் கடந்த 4 நாட்களாககுடிநீர் வரவில்லை கூலி வேலை செய்யக்கூடிய பணத்தில் ஒரு குடம் ரூ 15 க்கு குடிநீரை விலைக்கு வாங்க முடியுமா? குடிநீருக்காக யாரை பார்ப்பதற்கு ? எங்கே பார்ப்பது? என்று கேள்வி எழுப்பினர். அதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பெண்களிடம் அமைச்சர் 2 நாளில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றார்.