• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 2வது நாளாக வீணாகும் குடிநீர்..,

ByKalamegam Viswanathan

May 3, 2025

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் பைப் லைன்கள் இணைப்பதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் வினியோகம் செய்வதற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்ட பைப் லைனில் குடிநீர் விநியோக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் இணைக்கப்பட்ட குழாய்களில் முறையாக இணைக்கப்படாததால் சாலைகளில் தொடர்ச்சியாக லட்சக்கணக்கான குடிநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அமைக்கப்படாததால் குடிநீர் கலங்கலாக வருகிறது. சோலை அழகுபுரம்., ஜெய்ஹிந்த்புரம்., வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் சோதனை ஓட்டம் என்ற பெயரில் லட்சக்கணக்கான குடிநீர் வீணாக வெளியேற்றுவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.