• Wed. Apr 17th, 2024

திரௌபதி முர்மு சென்னை வருகை

ByA.Tamilselvan

Jun 30, 2022

பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ந்தேதிகூட்டணி கட்சியினரை சந்திக்க சென்னை வருகிறார்.
இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது. பா.ஜனதா-கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முபோட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன்படி பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னையில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார். அன்று புதுச்சேரியிலும் அவர் ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திரௌபதி முர்முதமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர். சென்னையில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *