• Tue. Apr 23rd, 2024

தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்

ByA.Tamilselvan

Feb 22, 2023

அன்னை தமிழை மீட்க என்ற முழுக்கத்துடன் சென்னையிலிருந்து தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்
கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி தொடங்கினார். இந்த அறக்கட்டளையானது அவ்வப்போது பல முக்கிய நிகழ்வுகளை தமிழ் அறிஞர்களின் பங்கேற்போடு நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தாய்மொழி தினமான நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பரப்புரை பயணம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழை தேடி விழிப்புணர்வு பயணம் என்ற இந்த நிகழ்வானது நேற்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ் மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். தமிழ்வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக ஆக்கப்பட வேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக ஆக்கப்பட வேண்டும். தமிழை படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ் பாடத்தின் மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை இந்த கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையானது கடந்த 2017-லேயே இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து தமிழை தேடி பயணம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை வரை ராமதாஸ் பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். அன்னை தமிழை மீட்க என்ற முழுக்கத்துடன் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *