புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சார்பில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் தலைமையில் மறைந்த டாக்டர் கலைஞரின் 102 வது நாள் விழா பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா, முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திமுக முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர், நந்தா. T. சரவணன் தலைமையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சவுரிராஜன், அவைத்தலைவர் எழிலன் தொகுதி துணை செயலாளர் ரவி, தொகுதி பிரதிநிதி தனசேகர், தொகுதி துணை செயலாளர் கலைவாணி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் தங்கராசு, மக்கள் சேவை மையம் மதன் பாபு, பாபு,பாஸ்கர், ரகுபதி, பாஸ்கர்(எ) ஆறுமுகம், பிரகாஷ், சந்துரு, சிவகுமார், முருகன், செல்வராஜ், அல்போன்ஸ், ஸ்ரீகாந்த், பார்த்திபன், உதயகுமார், சௌந்தர், முருகன், நாகராஜ், எழில், சுதாகர், ஆறுமுகம், மணி கூண்டு ராமலிங்கம், ராஜேந்திரன், மணி,எம்.பி ஏழுமலை, கணேசன், சூரியா டைலர், சுப்பிரமணி, ஆனந்தராஜ், முருகவேல், அப்பர், கருணாகரன், சந்திரன், விசு டைலர், மகளிர் அணி திருமதி தனம், தொகுதி மகளிர் அணி செயலாளர் லதா, சுந்தரி, செல்வி ஆரோக்கியமரி, லட்சுமி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.