திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்காக வெள்ளை நிற வேக தடுப்பு கோடுகள் போடப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் முதல் பெரிய கனர வாகனங்கள் வரை இதன் மீது ஏறி செல்லும் போது கடகட என அதிர்வு ஏற்பட்டு வாகனங்களை சற்று நிலை குலைய செய்கிறது.
உயிரை காக்க விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முதல் அரசு பேருந்துகள், அனைத்து தனியார் வாகன ஓட்டிகளும் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனர்.
திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனத்தின் வேகத்தை குறைக்க மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.