மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் பொது சுகாதார திருவிழாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் தளபதியின் தலைமையில் ஒரு நல்ல ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த நாளில், பொது சுகாதார திருவிழாவை இன்றைக்கு மேலூரில் கொண்டாடிக் கொண்டு இருப்பது மிகப் பொருத்தமான ஒரு விஷயம்.
இந்த பகுதி மக்களுக்கு, சுகாதார திருவிழா பெறும் விழிப்புணர்வையும் அதே நேரத்தில் பல நல்ல பணியையும் இங்கே செய்து கொண்டிருக்கின்ற பொது சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், அரசு அலுவலருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.தற்போது வீட்டில் எரிய வேண்டிய நெருப்பு, ஒவ்வொரு வீட்டினுடைய குடும்பத்தலைவி மற்றும் தலைவர்களுடைய அடிவயிற்றிலே எரிகின்ற நெருப்பாக மத்திய அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒரு மிக கடுமையான இந்த விலை உயர்வுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தினால் மட்டும் தான், பிரதமர் மோடி தன்னுடைய அரசினுடைய இந்த விலைவாசி மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை பின்னுக்கு தள்ள முடியும். எனவே பெரும் போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் சு.வெங்கடேசன் என்று தெரிவித்தார்.