• Sat. Jun 10th, 2023

பரிசோதனைக்கு அஞ்ச வேண்டாம் – மா.சுப்ரமணியன்

கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவ இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படும். 4 நாட்களில் அதற்கான ஆணை வெளிவரும். இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் பணம் சேர்த்து ஆனந்தம் அறக்கட்டளையுடன் இணைந்து 25 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கு உதவியாக ஆன்டிரோய்டு கைப்பேசி வழங்கியுள்ளனர்” என்றார்.

மேலும், “தமிழகத்தில் 75 % சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . 23 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *