ஊட்டி டி.என்.பி.எஸ்சி., குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ன்று முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டி யில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி – 2 பணி களுக்கான 5, 529 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியி டங்களுக்கு தேர்வு செய்வ தற்கான எழுத்து தேர்வு வரும் மே 21ம் தேதி நடை பெற உள் ளது. மேலும் தொகுதி-4 மற்றும் இதர டிஎன்பிஎஸ்சி., போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று (26ம் தேதி) முதல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு துறையால் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. போட்டி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெற லாம். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்