• Mon. May 13th, 2024

மகளிர்க்காக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்த திமுக, மகளிர் உரிமை மாநாட்டை நடத்துவதற்கு எந்த தகுதி கிடையாது..,

ByKalamegam Viswanathan

Oct 15, 2023

உலக மாணவர் தினத்திலாவது திமுக கொடுத்த வாக்குறுதியான நீட் தேர்வு, கல்வி கடனை ஆகியவற்றை ரத்து செய்வார்களா?

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள விடத்தக்குளம், மையக்குடி, வடகரை, மேலக்கோட்டை, ராயபாளையம் ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது இதற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார் மற்றும் இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே தமிழரசன், கே.மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் சி.முருகன், திருமங்கலம் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமையா, கண்ணன், மாவட்ட வழக்கறி பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவண பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது.,

தமிழகம் முழுவதும் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க பூத் கமிட்டி சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருகின்ற தேர்தலில் இரட்டை இலை வெற்றியை யாரால் தடுக்க முடியாது.மகளிர் உரிமைத் தொகையில் மிகப்பெரிய குளறுபடியை அரசு ஏற்படுத்தி உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா பெண்களுக்காக தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்தார்கள் இதில் மூலம் 12.50 லட்சம் பேர் பயன்பெற்றனர். கிராமப்புற பெண்களின் பொருளாதார உயர கறவை மாடு,ஆடு திட்டத்தை கொண்டு வந்தார்.உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகன திட்டம் அம்மா அறிவித்தார் அந்த திட்டத்தினை எடப்பாடியார் வழங்கினார்.

அதேபோல் பெண் சிசுகொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை அம்மா கொண்டு வந்தார் அதனை அன்னை தெரசா பாராட்டினார். அதேபோல் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சகவீத இட ஒதுக்கீட்டை புரட்சிதலைவி அம்மா கொண்டு வந்தார் அதனை எடப்பாடியார் செயல்படுத்தினார்.

ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் ,கறவை மாடு ஆடுகள் திட்டம் இருசக்கர வாகன திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்துள்ளது தற்போது திமுக மகளிர் உரிமை மாநாடு நடத்துவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

காவிரி பிரச்சனை குறித்து எடப்பாடியார் பேசியபோது அவரைப் பேச விடவில்லை.எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு நேரம் கட்டுப்பாடு கிடையாது ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் தண்ணீரை தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுகிறது .ஆனால் கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்று எடப்பாடியார் குற்றம் சாட்டினார் அதற்கு ஸ்டாலின் மழுப்பலான பதிலை கூறினார்.

அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 15ம்தேதியை உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் காப்பதில் புரட்சித்தலைவர், புரட்சிதலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் ஆற்றிய பங்கு மகத்தானது .புரட்சி தலைவர் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை வழங்கினார் இந்த சத்துணவு திட்டத்தில் பயன்படாத மாணவர்கள் இல்லை ஐநா சபை வரை இந்த திட்டம் புகழ்பாடப்பட்டது.வயிற்றுப் பசியை போக்கிய புரட்சித் தலைவரின் வழிவந்த அம்மா மாணவர்கள் அறிவுபசியை தீர்ப்பதற்காக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார்.

இனி வருகிற காலம் கணினியுகம் என்பதை அறிந்து மரத்தடியில் படிக்கின்ற மாணவ செல்வங்களுக்கு மடிக்கணினியை வழங்கி சாதனை படைத்தார்.இதன் மூலம் 52 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது.அதனை தொடர்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டு வகையில் 7.5 இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து இதன் மூலம் எடப்பாடியார் சமூக நீதி காவலராக திகழ்ந்தார்.

புரட்சித்தலைவி அம்மா மற்றும் எடப்பாடியார் ஆட்சியில் தான் இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 51 சதவீதமாக இருந்தது.9.69 லட்சம் கல்லூரி மாணவர்கள் இணைய வழி கல்வியை மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கினார் எடப்பாடியார். மாணவர்களுக்கு காலணி முதல் கணினி வரை 14 வகை கல்வி உபகரணங்களை மகத்தான திட்டத்தை அம்மா அரசு வழங்கியது.

கொரோனா காலத்தில் மன உளைச்சலில் மாணவர்கள் இருந்தனர் இதனையொட்டி எடப்பாடியார் ஒரு மனதத்துவ நிபுணரை போல் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றால் போதும் என்று ஆல் பாஸ் என்று அறிவித்தார் இதனை தொடர்ந்து மாணவர்கள் அவரை ஆல்பாஸ் முதல்வர் என்று பாராட்டினர்.

இன்றைக்கு உலக மாணவர்கள் தினம் ஆனால் இன்றைக்கு மாணவர்களுடைய நிலை என்ன? பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளுக்கு அருகிலே போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது இன்னைக்கு பள்ளி மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தருகிற அந்த புள்ளி விவரங்கள் கூறுகிறது.இந்த பேராபத்தை சீர்படுத்த வேண்டும் அரசு எச்சரிக்கையோடு கையாள வேண்டும் இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.

இந்த நாட்டினுடைய வருங்கால துண்களாக மாணவ சமுதாயத்தை அறிவு சார்ந்து சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ,எடப்பாடியார்ஆகியோர் அதற்கான திட்டங்களை வகுத்தனர்

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மாணவர்களிடத்திலே, பெற்றோர்களிடத்திலே நீங்கள் நம்பிக்கை ஏற்படுத்தி அதன் மூலமாக நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்பு இன்றைக்கு நீங்கள் ஒரு கோடி கையெழுத்து கேட்கிறீர்களே?

மாணவருடைய எதிர்காலம் என்ன ஆகும். உங்களுக்கு வாக்களித்த மாணவர்கள் இன்றைக்கு நடுரோட்டில் வீதியிலே இருக்கிறார்கள்

கல்விக்கடனை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே அதை நம்பி வாக்களித்த மாணவசெல்வங்களின் குடும்பங்கள இன்றைக்கு கண்ணீரோடு கவலையோடு வேதனையோடு இருக்கிறார்கள்.

மாணவ செல்வங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று கூறினீர்கள் இன்றைக்கு ஒரு கோடியே 10 லட்சம் மாணவர்கள் செல்வங்கள், இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்து காத்திருக்கிறார்களே? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று சொன்னீர்களே?மேலும் அரசு வேலை வாய்ப்புகளை உடனடியாக பூர்த்தி செய்வோம் என்று சொன்னீர்களே ? இன்றைக்கு மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் சொன்னதை ஒன்று கூட செய்யவில்லை

இன்றைக்கும் நீட் தேர்வால் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது அந்த தற்கொலைக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா?

வேலை வாய்ப்பு இல்லை, வறுமையை ஒழிக்கவில்லை, கல்விக் கடனை ரத்து செய்யவில்லை, நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. இந்த உலக மாணவர் தினத்திலாவது நீட் தேர்வு ரத்து, கல்வி கடனை ரத்து ஆகியவற்றை செய்து, மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டத்தை வழங்க வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தைப் பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும் அதுதான் எண்ணமாக உள்ளது. தற்போது தமிழகம் இருள் சூழ்ந்து உள்ளது இதற்கு தீர்வு காண எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் நிச்சயம் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் அப்போது தமிழகத்திற்கு விடிவு காண்பார் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *