திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான, கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.

இதைப்போல் கருணாநிதி பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளையில் அவரது 102-வது பிறந்த நாள் விழாவினை திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கெளதமன் தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலைஞரின் தாய் தந்தையான முத்துவேலர் அஞ்சுகத்தம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, திமுக கட்சி கொடி ஏற்றிவைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திமுகவினர் புகழ் வணக்கம் செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.