• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர்..,

ByR. Vijay

Jun 1, 2025

நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகபர்தீன் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்தார். நாகையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு இன்று வருகைத்தந்த ஜெகபர்தீன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

அவரோடு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பகுதி பொறுப்பாளர்களும் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு பொறுப்பு தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி நலத்திட்டங்கள் வழங்குவதற்கு எங்களை சொந்தமாக செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் கட்சியில் இருந்து விலகிய ஜெகபர்தீன் தெரிவித்துள்ளார்.