


உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்த கவர்னர் செயல் சட்டவிரோதம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசிற்கு ஆதரவாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்று சிவகாசியில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக மாநகர மேயர் சங்கீதா இன்பம் , சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் ஆகியோர் தலைமையில் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


