• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

டெபாசிட் இழந்த திமுக..சந்தோஷபடுவதா…வருத்தப்படுவதா

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், பெரும்பாலான மாநகராட்சிகளில் திமுகவே முன்னிலை பெற்றுள்ளது. அதோடு, நிறைய பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் 50 சதவீதத்திற்கும் மேலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி இருந்தாலும், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பேரூராட்சியின் 9-வது வார்டில் திமுக டெபாசிட் இழந்தது.

இங்கு, பாஜக வேட்பாளர் 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக 30 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது. இது, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.