• Sun. Oct 6th, 2024

கனிமவள கொள்ளையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்-ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு

ByKalamegam Viswanathan

Mar 15, 2023

தமிழக முழுவதும் கனிமவள கொள்ளையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை அலங்காநல்லூர் அருகே குமாரத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பிளஸ் டூ தேர்வு எழுதும் 50,000 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டும் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளதால் திமுக அரசு கல்வித்துறையில் செயல் இழந்துவிட்டது மேலும் தமிழக முழுவதும் கனிமவள கொள்ளையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து உயர் நீதிமன்றத்திடம் கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் குறிப்பாக குறிப்பாக மதுரை மாவட்டம் சோழவந்தான் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கனிம வள கொள்ளை நடைபெறுகிறது அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தமிழக முழுவதும் அதிமுக தொண்டர்களுடைய ஆதரவு பெருகி வருகிறது என்று கூறினார் இதில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *