• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வாக்களித்த மக்களுக்கு திமுக துரோகம் செய்கிறது, அன்பழகன் ஆவேசம்..,

ByB. Sakthivel

Apr 9, 2025

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் மாநில கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில பிற அணி நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று உப்பளம் தலைமை அலுவலகத்தில்
நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது,

தேர்தல் கூட்டணி என்பது அதிமுக வெற்றிக்காக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் கூறும் கூட்டணி தான். தமிழகத்தில் கொடிய திமுக அரசை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு மெகா கூட்டணியை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள் எடுப்பார். அவரது ஆலோசனைப்படி புதுச்சேரியிலும் அதிமுக வெற்றி வாய்ப்பை பெறும்.

புனித இடமாக கருதப்பட வேண்டிய சட்டமன்றத்தை வெற்று அரசியல் செய்யும் இடமாக தமிழக திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாற்றி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஆட்சியின் ஊழல், முறைகேடுகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பிச்சனைகள் குறித்து கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதார பூர்வமாக எடுத்துரைக்கிறார். உடனே அவரை பேச விடாமல் தடுப்பதும், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை உருவாக்குவதும், அல்லது சர்வாதிகார செயலாக வெளியேற்றுவதிலும் குறிக்கோளாக தமிழக முதலமைச்சர் உள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நீட் தேர்வை சம்பத்தபடுத்தி பாஜக கூட்டணி பற்றி பேசுகிறார். பாஜக கூட்டணி அதிமுக அமைக்கும் போது பாஜக நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு கூட்டணி அமைக்க வேண்டும் எனகிறார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம்.

எங்களது கூட்டணியில் நிபந்தணை விதிப்பது திமுக முதலமைச்சர் ஸ்டாலின் என்ன அதிமுக தொண்டரா? முதலில் அவரது கூட்டணியை பற்றி அவர் சிந்திக்க வேண்டும். 3 முறை திமுக ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் வெட்கமே இல்லாமல் திமுக கூட்டணி அமைந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட அவசரகால பிரகடனத்தின் போது பல முக்கிய தலைவர்களை தாக்கி 100-க்கணக்கான திமுகவினரை சிறையில் அடைத்த காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்த போது கச்சத்தீவை மீட்போம் என பாஜகவிடம் ஏதாவது நிபந்தனை விதித்து கூட்டணியில் ஸ்டாலின் சேர்ந்தாரா? பல்வேறு கொள்கை முரண்பாடான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அதுவும் அதிமுக இல்லாத சூழ்நிலையில் சட்டமன்றத்தில் பெரிய சாதிப்பு மன்னன் போன்று அதிமுகவை விமர்சனம் செய்கிறார். இவரது செயல் 23-ம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும் ஒரு்சிலர் பாஜகவுக்கு ஆதரவாகவும், மாண்புமிகு முதலமைச்சருக்கு ஆதரவாகவும் உள்ளனர். புதுச்சேரி அரசும் திமுக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுசரணையாக நடந்து வருகிறது. சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சிறிது காலமே இருக்கும் சூழ்நிலையில் அரசின் எதிர்கட்சிகளிடம் அனுசரனையாக நடக்கும் சூழ்நிலை தேவையற்றதாகும். அது சட்டமன்ற தேர்தலில் ஆளும் அரசின் கூட்டணிக்கு நிச்சயம் எதிர்விணைகளை ஏற்படுத்தும் எனவே சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து வரும் சட்மன்ற தேர்தலில் நம்மோடு இருப்பவர்கள் யார்? நமக்கு துணை நிர்பவர்கள் யார்.? யார் நமக்கு எதிரியாக செயல்படுவார்கள் என உணர்ந்து அரசை நடத்த வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கோமளா, மாநில கழக இணைச் செயலாளர்கள் வீரமமாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள், எம்.ஏ.கே கருணாநிதி, டி.குணசேகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம். நாகமணி, ஏ.,காந்தி, ஆர்.மணவாளன், புதுச்சேரி நகர கழக செயலாளர் ஏ.அன்பழகன் உடையார், உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ்.சித்தானந்தம், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர். பார்த்தசாரதி, மாநில மகளிர் அணி செயலாளர் பி.விமலாஶ்ரீ, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஏ.பாப்புசாமி,மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்.மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுதர்சன்,,மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் டி. செல்வம், முன்னாள் மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ,முன்னாள் மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக் கேணி பாஸ்கரன், தொகுதி கழக செயலாளர்கள் எம்.சிவகுமார், கே.ஆறுமுகம், ஜி.கருணாநிதி, ஆர்.எம்.நடேசன். கே.சம்பத், எஸ்.ராஜா, எம். கமல்தாஸ், Dr.எஸ். கணேஷ் கே. குணசேகரன், பி. கிருஷ்ணன், இளங்கோவன்,,வி. கோபால், ஆர்.சீனிவாசன் மாநில மகளிர் அணி தலைவர் தரணிதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜானிபாய், பாலன்,சிவராமராஜா, செந்தில் முருகன், ஜெயந்தி,லயன் சுரேஷ் தொகுதி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட கழகத்தினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.