• Tue. Apr 22nd, 2025

புதுச்சேரியில் மகிளா காங்கிரசார் நூதன போராட்டம்

ByB. Sakthivel

Apr 9, 2025

புதுச்சேரியில் மகிளா காங்கிரசார் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், சிலிண்டர், விறகுகளை தலையில் வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயுவின் விலையை மேலும் 50 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கேஸ் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ராஜா தியேட்டர் சிக்னலில் புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸார் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரசார் சிலிண்டர், விறகு கட்டைகளை தலையில் வைத்துக் கொண்டும், சிலிண்டர்க்கு மாலை அணிவித்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கலைய செய்தனர்.