திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி என்ற தலைப்பில் வெம்பகோட்டை மேற்குஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான வழக்கறிஞர் நல்லதம்பி முன்னிலை வகித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ராமதேவன்பட்டி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆலோசனையின்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி
வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் வாக்குசாவடியில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள்,ஒன்றிய பிரதிநிதிகள், ஒன்றிய அணி பூத் கமிட்டி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேற்கு ஒன்றியசெயலாளர் ஜெயபாண்டியன் பேசியது முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறார்.அதனை தொடர்ந்து வீடு வீடாக மக்களிடம் கொண்டு சென்று சாதனைகளை விளக்கிக் கூற வேண்டும். சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை காட்டிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு பூத்துகளிலும் கூடுதலாக வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இப்போது முதல் தேர்தல் பணியை தீவிர படுத்த வேண்டும் எனக் கூறினார் .
தொடர்ந்து இராமுதேவன்பட்டி கிராமத்தில் பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்..





