• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நீலகிரியில் கஞ்சா விற்ற தி.மு.க., நிர்வாகி கைது?

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியைச் சேர்ந்தவர் கைது செய்யபட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா நாடு காணி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் தேவாலா துணை கண்காணிப்பாளர் உத்தரையின்படி குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.. தேவாலா பகுதியைச் சேர்ந்த மணிராஜ் என்பவர் வயது (28 ) அவர் திமுக மாணவர் அணியைச் சேர்ந்தவர். அவர் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

அவர் ஆட்டோவை குற்றப்பிரிவு போலீஸ் சார் சோதனை செய்த பொழுது ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவருக்கு துணை போன நாடுகாணியை சேர்ந்த கலைவாணன் வயது (48) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து தேவாலா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் பின்னர் விசாரணை முடிந்த பின் இருவரையும் கூடலூர் சிறையில் அடைத்தனர்.