மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு இருபுறமும் நிழற்குடை அமைத்து தர தங்கதமிழ்செல்வன் எம்.பி. யிடம் திமுகவினர் கோரிக்கை வைத்தனர்.
தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தனக்கு வாக்களித்த சோழவந்தான் தொகுதி மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கிராமங்கள் தோறும் சென்று நன்றி தெரிவித்து வந்தார் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த திமுகவினர் சோழவந்தானில் எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் இதனால் பாராளுமன்ற நிதியிலிருந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு இருபுறமும் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து எம்பி கூறுகையில்.., இது சம்பந்தமாக உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் ஆகியோரிடம் கலந்து பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் விரைவில் நிழற் குடைகள் கட்டித் தருவேன் என உறுதி அளித்து சென்றார் இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ உ சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு அருகில் நிழற் குடை அமைக்க தேவையான இடம் இருப்பதாகவும் ஆகையால் இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
