சோழவந்தானில் முரசொலி செல்வம் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவரும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியரும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மாமாவுமான முரசொலி செல்வம் மறைவையொட்டி, மதுரை மாவட்டம்
சோழவந்தானில் அவரின் திரு உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி துணைத் தலைவர் லதா, கண்ணன், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, வார்டு கவுன்சிலர்கள் முத்துச்செல்வி, சதீஷ், சிவா, நிஷா, கௌதமராஜா, கொத்தாலம், செந்தில் குருசாமி, செல்வராணி, நிர்வாகிகள் அவைத் தலைவர் தீர்த்தம், மாணவர் அணி எஸ். ஆர். சரவணன், சங்கங்கோட்டை ரவி சந்திரன், நூலகர் ஆறுமுகம், சபாபதி, மணி, பாண்டி மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் சௌந்தரபாண்டி, முட்டை கடை காளி சுரேஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பேரூர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் முரசொலி செல்வம் படத்திற்கு ஊராட்சி செயலாளர் கேபிள் ராஜா தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.