• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

எஸ். ஐ .ஆருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

ByS.Ariyanayagam

Nov 11, 2025

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் SIR-க்கு எதிராக அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், விசிக மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.