

கரூர் காந்திகிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம், கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மலையப்ப சாமி தலைமையில் நடைபெற்ற போட்டியினை துவங்கி வைத்தார்.
இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி சிலம்பத்தில் தனித்திறமை போட்டி மற்றும் தொடு முறை போட்டி என இரு பிரிவிகளின் நடைபெற்றது.

10, 14, 17, 19 ஆகிய வயதுக்குட்பட்ட எடைப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த சிலம்பாட்ட பேட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதில் ஆண் பெண் இரு பிரிவுகளிலும் முதல் பரிசு பெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாட உள்ளனர்.
இப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை சிலம்பாட்ட கழகச் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

