• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை..,

ByAnandakumar

May 20, 2025

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன.

கடவூர் வட்டத்தில் உள்ள வரவணை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு குளங்களை அந்தப் பகுதியில் உள்ள பசுமை குடி என்ற தன்னார்வ அமைப்பு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தூர்வாரி வருகிறது.

இதுவரை 5 க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் வரவணை பகுதியில் அண்மையில் தூர்வாரப்பட்ட 5 குளங்களில் மழை நீர் சிறிது சிறிதாக நிரம்பி வருகிறது. இது அந்த கிராமத்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.