• Tue. Feb 11th, 2025

மாற்றுத் திறனாளிகள் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.

ByG.Suresh

Mar 22, 2024

சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். முன்னதாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.