சிவகங்கை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்நாதன் வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸை அதிமுக தலைமைக் கழகம் இன்று அறிவித்த நிலையில் சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் MLA வை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அதன்பின் வேட்பாளருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார். மாவட்ட செயலாளர் இந்த சந்திப்பின்போது அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், சிவகங்கை நகரச் செயலாளர் ராஜா ,ஒன்றியச் செயலாளர்கள் கோபி சிவ சிவ ஸ்ரீ தர் செல்வமணி, அருள் ஸ்டீபன், சிவாஜி மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.