அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸை அதிமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்த நிலையில், சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் MLA வை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அதன்பின் வேட்பாளருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை அடுத்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் சிவகங்கை MPவேட்பாளர் சேவியர் தாஸ் ஆகியோர் அதிமுக கழகச் செயலாளர் முன்னாள் முதல் எடப்பாடி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இதனை அடுத்து நாளை காலை சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.