• Fri. Apr 26th, 2024

போலீசாரின் துரித நடவடிக்கையால் மதுரையில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசிகள்

Byமதி

Nov 12, 2021

மதுரையில் இன்று டன்கனக்கான ரேஷன் கடை அரிசி போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

தமிழகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் CSCID போலீஸ் டி.ஜி.பி ஆபாஸ்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் போலீசார் உணவுப் பொருட்கள் கடத்தலை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று மதுரையில் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் இவர்களின் மேற்பார்வையில், ஆயவாளர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சமத்துவபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், 46,160 டன் ரேஷன் அரிசியைக் கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட அருண் பாண்டி, குமார் என்பவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டனர். இது தவிர ஒரு லாரி, ஒரு ஆட்டோ, மற்றும் மூன்று இரண்டு சக்கர வாகனத்தையும் கைப்பற்றினர். மேலும் இதில் வேறு யாரேனும் உள்ளனரா? என்று காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *