மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து வசித்து வருகிறார். .
கொரோனா காலம் தொட்டு தான் இருக்கும் தனக்கும் குளம் பகுதியில் வசிக்கக்கூடிய நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் தனது வீட்டில் அருகே வசிக்கக்கூடிய சுமார் 250க்கும் மேற்பட்ட முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
தொடர்ந்து மதுரை முத்து பேசுகையில்:

எத்தனையோ குடும்பங்களில் தீபாவளி பண்டிகை என்பது புத்தாடைகள் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டு இருக்கிறார்கள் நான் வாழ்ந்த கிராமத்தில் கூட இன்றளவும் அந்த நிலை இருக்கத்தான் செய்கிறது

அதனை கருத்தில் கொண்டு நான் தற்போது வசிக்கக்கூடிய இந்த தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற மற்றும் மிகவும் நலிந்த நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீபாவளியின் போது அவர்கள் புத்தாடை உடுத்தக்கூடிய வகையில் சேலை வேஸ்டி பட்டாசு உள்ளிட்டவைகளை வழங்கி இருக்கின்றோம்.
அதேபோல பெரிய பெரிய கடைகளில் துணி வாங்கினாலும் கூட சாலையோரங்களில் துணிகள் பட்டாசுகள் விற்பவர்களிடமும் கொஞ்சமாவது வாங்குங்கள் அவர்களின் பிள்ளைகளும் தீபாவளி கொண்டாட வேண்டும்.

பொது புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வு புத்தகங்கள் 7000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கவர்ச்சியாகவும் வைத்து பார்த்து விட்டோம் ஆனால் இன்றைய இளைஞர்களிடம் படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது மிகவும் வருத்தமாக உள்ளது என மதுரை முத்து கூறினார்.