• Sun. Nov 1st, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விஐபி வருகையின்போது மின்தடை; இளநிலை மின் பொறியாளர் சஸ்பெண்ட்..,

ByKalamegam Viswanathan

Nov 1, 2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சமீபத்தில் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது ஏற்பட்ட திடீர் மின்தடை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கோயிலை பார்வையிட வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வருகையின்போது, மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட கோளாறால் மின்தடை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் இளநிலை மின் பொறியாளர் ஜானகிராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.