• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புதுவண்ணாரப்பேட்டையில் மருந்தகம் மூலம் போதை மாத்திரைகள் விநியோகம்…

Byadmin

Apr 12, 2022

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மருந்தகம் மூலம் போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் விற்ற மருந்தக உரிமையாளர் மற்றும் சேல்ஸ் மேனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனத்திற்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்தது. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தனிப்படை உதவி ஆய்வாளர் விஜய் தலைமையில் காவலர்கள் சதாசிவம், முகமது பாவா மற்றும் சரத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். புதுவண்ணாரப்பேட்டை வ.ஊ.சி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்து அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் மேற்கு முகப்பேரை சேர்ந்த பாண்டுரங்கன், திருப்பதியைச் சேர்ந்த கோபிநாத், கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ் குமார், கிழக்கு முகப்பேரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என தெரியவந்தது. மருத்துவரின் பரிந்துரையின்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 வகையான வலி மற்றும் மயக்கம் மாத்திரைகள் மருத்துவ உபகரணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் என 1000 மாத்திரைகள் 86 ஊசிகள் 6 செல்போன்கள், ஒரு இருசக்கர வானத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.