சிவகங்கையில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேவியர் தாஸ் என்பவர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நாட்டரசன் கோட்டை அருகே உள்ள பணங்காடியை சேர்ந்த சேவியர் தாஸ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆசி பெற்ற இவர், இன்று, சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
அதிமுக வேட்பாளர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜா அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஒன்றிய செயலாளர் கருணாகரன் ஸ்டீபன் ராஜ் கோபி மற்றும் ஏகே பிரபு உள்ளிட்ட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.