தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 860 இடங்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நேரடி மாணவர்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதுவரை நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.