• Thu. May 2nd, 2024

அதிமுக மாநாடு தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையாக அமையும்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு…

அதிமுக மாநாடு தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையாக அமையும் என்றும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுகவின் வீர எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து சிவகாசி சட்ட மன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசும்போது,


மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் பேச்சை கேட்க நாம் அனைவரும் அணி திரண்டு செல்ல வேண்டும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20ஆயிரம் பேர் கலந்து கொள்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அதிமுக மாநாடு தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையாக அமையும். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நம்முடைய இயக்கத்தினுடைய வளர்ச்சியை பார்த்து இன்றைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். ராணுவ கட்டுப்பாடோடு இயங்கும் ஒரு இயக்கம். எடப்பாடியார் தலைமையிலே 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களை உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் இன்றைக்கு வளந்திருக்கிறது. டெல்லியில் இருக்கின்ற அரசியல் தலைவர்களே வியக்கின்ற அளவில் நம்முடைய இயக்கத்தை எடப்பாடியார் மூன்றாவது அத்தியாயத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். வரும் காலம் நமது காலம் என்பதை நிரூபிக்கின்ற வகையில் இந்த மாநாடு சிறக்க இருக்கின்றது. நாம் அத்தனை பேரும் வந்திருக்கின்ற ஒன்றிய, நகர, செயலாளர்கள் கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் பகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் அழைத்துச் செல்கின்ற கழக நிர்வாகிகளை பொதுமக்களை அந்தந்த வண்டிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமித்து பத்திரமாக பாதுகாப்பாக அவர்களை அழைத்து செல்ல வேண்டும். மாநாட்டிற்கு காலையிலே 10 மணிக்கு கிளம்பிடனும். 10 மணிக்கு கிளம்பினால்தான் அங்க பிரியா போய் இருக்கலாம். கட்சி பொறுப்பாளர்களை கட்சித் தொண்டர்களை கிராமத்து இளைஞர்களை பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பி வரவேண்டும். அவர்களுக்கு எந்த விதமான பிரச்சனை உருவாகக்கூடாது என்பதை பற்றி தான் அடிக்கடி மாவட்டச் செயலாளர் கூட்டங்களிலே நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சொல்லி வருகிறார். அவருடைய அந்த வாக்கை வேதவாக்காக நினைத்து நாம் அனைவரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டம் பிரச்சினை இல்லாமல் வந்தார்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள், பொதுச்செயலாளர் எடப்பாடியார் பேச்சை கேட்டார்கள் ஊர்களுக்கு அமைதியாக திரும்பி சென்றார்கள் என்ற நிலைதான் இருக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ்,மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாநகர பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம்(எ)ராஜஅபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராணயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட மீணவரணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், மாநகர கவுன்சிலர் கரைமுருகன், கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், ஒன்றிய இணை செயலாளர் இளநீர் செல்வம், பள்ளபட்டி ரமேஷ், வழக்கறிஞர் மாரீஸ்குமார், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத்தம்பி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிக்குமார், முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் காமாட்சி, திருத்தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், தொகுதி கணேசன், ஒன்றிய இளைஞரணி சங்கர், மாநகர இளைஞரணி கார்த்திக், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *