• Mon. Dec 2nd, 2024

ஏப்ரல் 30 முதல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Apr 27, 2024

வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் ஏப்.30, மே 1 ஆகியதேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும். மே 2-ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில்வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *