• Sat. Apr 20th, 2024

தினமலரை தினமலம் என்றா இழிவு படுத்தினோம்? – வைகோ

Byகுமார்

Oct 23, 2021

பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம் ஆனால் முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் தான் நடைபெற்றுள்ளது. – வைகோ பேட்டி அளித்துளளார்.

மதுரையில் நடைபெற உள்ள கட்சி நிகழ்வில் பங்கு பெறுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்:

துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கியதால் எதிர்ப்புகள் வந்துள்ளது குறித்த கேள்விக்கு:

அது ஒரு அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் நடப்பதை போல வாக்குப் பெட்டி வாங்கி ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 106 பேரில் 104 பேர் துரை வையாபுரி மதிமுகவிற்கு வரவேண்டுமென்று வாக்களித்திருந்தனர். பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம், ஆனால் முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்சியும் இல்லாததும் மதிமுகவில் தான் நடைபெற்றுள்ளது. தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவற்றை வரவேற்று மாவட்ட செயலாளர்கள் அவருக்கு உயரிய பதவியை அளிக்க வேண்டும் என்று கூறியதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் துரை அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். அரசியல் ஒரு சூழல், இதில் மாட்டிக் கொண்டால் நிறைய பிரச்சனைகள் வரும். நிம்மதி இருக்காது என்று அவருக்கு பல முறை அறிவுரை கூறினேன். துரை வையாபுரி தகுதி வந்துவிட்டது மேடையிலும் நன்றாக பேசுகிறார், பேட்டியிலும் நன்றாக பேசுகிறார். அவருடைய பேட்டியைப் பார்த்து விட்டு முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி அருமையான தலைவர் உருவாகி வந்துள்ளார் என்று அவர் சொன்னார்.

இன்று தினமலரில் வந்துள்ள பெயர்களில் பலர் எனது வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட முறையில் துறை வைகோவை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தகவல் அனுப்பி இருந்தார்கள். தினமலரில் என்னைப் பற்றிய செய்தியே வராது இந்த அளவிற்கு பெரிய செய்தி போடுவதற்கு என் மீது கடுப்பு என்ன. தினமலரை தினமலம் என்று இழிவு படுத்தி சங்கொழியில் எழுதினோமா, தினமலர் அலுவலகத்தை தாக்கி கலவரம் செய்தோமா இந்த அளவிற்கு எங்கள் மீது ஆத்திரம் எதற்கு. இதன் மூலம் கட்சியை உடைக்கலாம் என்று நினைக்கிறார்களா! அது நடக்காது கட்சியில் இருந்து ஒரு சிலர் வெளியேறி உள்ளார்களா கட்சிக்கு அது நல்லதாக முடியும். மதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை வலுவாக உள்ளது.

மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் விலகியது குறித்த கேள்விக்கு:

என்னால் தொடர்ந்து போக முடியாததால் விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாரே தவிர வேறு எதுவும் குற்றச்சாட்டு கூறவில்லை.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள விமான நிலைய திறப்பு விழாவில் ராஜபக்சேவை விருந்தினராக வரவேற்கிறது குறித்த கேள்விக்கு:

அந்தக் கொலைகாரனை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது. முன்பைப் போல் இருந்திருந்தால் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது நாங்கள் 1500 பேர் சேர்ந்து எதிர்த்தோம். லண்டனுக்கு ராஜபக்சே வருவதாக் இருந்தபோது அடித்து விரட்ட சொல்லி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது குறித்த கேள்வி:

தவறுகள் செய்ததால் ரெய்டு நடக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *