• Mon. Apr 29th, 2024

விஜயதரணியும் கட்சி தாவலா.? என தொடரும் தகவல் முற்று புள்ளி எப்போது.

குமரி மாவட்டத்தை தாயகமாக கொண்டவர் விஜயதரணி என்றாலும், இவரது தந்தை சென்னையில் பல் மருத்துவராக மருத்துவ தொழில் நிமித்தமாக சிறுமி பருவம் முதல் சென்னையிலே வாழ்ந்தவர்.

வழக்கறிஞரான இவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் ஜீனியராக இருந்தவர். பின்னாளில் டெல்லி சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் என்ற நிலையில் இவரது வழக்கறிஞர் பணி தொடர்ந்தது. காங்கிரஸ் கட்சியிலும் பயணித்தார்.

டெல்லிக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பால். டெல்லியில் உள்ள காங்கிரஸ் பிரபலங்களிடம் ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள, ப.சிதம்பரத்தின் மனைவியின் உதவி வழக்கறிஞர் என்ற அறிமுகமும் உதவி செய்தது.

குமரியை சேர்ந்த புகழ் கவிஞர் ஐயா கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் பேத்தி என்பது இவருக்கு கூடுதல் பெருமை மிகுந்த பொது வெளியில் கிடந்த அதிகமான அறிமுகம்.

மணிசங்கர் ஐயர் பஞ்ஞாயத்ராஜ் அமைப்பின் தலைவராக இருந்த போது, விஜயதரணிக்கு பஞ்சாயத் ராஜ் அமைப்பில் இவரும் ஒரு பொருப்பு வகித்தார்.

விஜயதரணி பொதுவெளியில் கட்சி சார்பு கடந்த நல்ல நட்புடன் இருப்பது இவரது அணுகுமுறை.

வழக்கறிஞர், டெல்லி வட்டாரத்தில் உள்ள தொடர்புகள், ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் மணிசங்கர் ஐயர் என்ற நிலைகளில் அவர் தலைவராக அங்கம் விகிக்கும் பஞ்ஞாயத் ராஜ் அமைப்புக்கு தேர்தலில் கோட்டா (ஒதுக்கீடும் )இருந்தது.

மணிசங்கர் ஐயருக்கு தமிழக காங்கிரஸ்யில் மைலாடுதுறை சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

மணிசங்கர் ஐயருக்கும் அவர் தொடர்ந்து பரிந்துரை செய்யும் ராஜ்குமார் (இப்போதைய மைலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்)2004 _சட்டமன்ற பொது தேர்தல் காலத்தில் பிணக்கு ஏற்பட்டிருந்த சூழலில், விஜயதரணி 2004 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு டெல்லியில் செய்த முயற்சிகள் கை கொடுக்காத சூழலில் சோர்ந்து போய் சென்னைக்கு திரும்பி விட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர் வெற்றி பெற்று வந்த தொகுதி. 2004_தேர்தலில் காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டது. பொன்னப்பநாடாரின் மகன் பொன். விஜயராகவன் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு , அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஜீகே. வாசன் மூலம் ஆதரவின் அடிப்படையில் விஜயராகவனின் பெயர் பட்டியலில் ஏற இருந்த கடைசி நொடியில் நடந்த அதிசயம்.!?

மணிசங்கர் ஐயரின் கோட்டாவில் பஞ்ஞாயத் ராஜ் அமைப்பில் இருப்பவர் என் கூடுதல் தகுதியோடு விஜயதரணியின் தேர்தல் கனவு நனவாகிவிட்டது.

விஜயராகவனே அப்போது அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள செய்தியாளர்கள் பலரிடம் சொன்னது. கடைசி நேரத்தில் மணிசங்கர் ஐயர் கோட்டா என்று ஒன்று வரும் என்பதை அவர் சிந்தித்து பார்க்கவே இல்லை என தெரிவித்தார்.

விஜயராகவன் மிகுந்த மன சோர்வில் பாஜகவில் போய் சேர்ந்தார். விவசாய அணித்தலைவர் என்ற ஒரு பதவி கிடைத்தது.

சட்டமன்ற தேர்தல் 2014யில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் விஜயராகவன் போட்டியிட்டு. காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் (உறவு முறையில் மருமகன்) இடம் தோல்வி அடைந்தார்.

குமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கன்னியாகுமரி, விளவங்கோடு சாதிய அடிப்படையில் வித்தியாசமான தொகுதிகள்.

விளவங்கோடு தொகுதியில் நாயர், பிள்ளை ,நாடார் என்ற சாதிய பிரிவில் நாயர், பிள்ளை வாக்காளர்கள் அதிகம். விஜயதரணி பிள்ளை இனத்தைச் சேர்ந்தவர், அடுத்து காங்கிரஸ் கட்சி, கூட்டணி பலம் என்ற முறையில் தொடர்ந்து மூன்று முறை வெற்றியை தக்கவைத்துக் கொண்டார்.

இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றாகி விட்டது. அடுத்து மூன்றாவது முறை வாய்ப்பு குதிரை கொம்பு என்ற நிலை விஜயதரணிக்கு மட்டுமே அல்ல, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்க்கும் வாய்ப்பு கேள்வி குறியாக இருந்த நிலையில், அன்றும் விஜயதரணி அ தி மு க விற்கு போக போகிறார் என்ற செய்தி பரவியது. ஆனால், ப. சிதம்பரம் செய்த கடைசி நேர பரிந்துரையில் விஜயதரணிக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு கொடுத்ததால். பிரின்ஸ்யை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டு அவரும் வாய்ப்பு பெற்றார்.

இப்போது உள்ள பிரச்சினை குளச்சல், விளவங்கோடு தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக எழும் நிலையில், இருவருமே கன்னியாகுமரி மக்களவைக்கு போட்டியிட டெல்லியில் சிலரை பிடித்து காய் நகர்த்தி வரும் சூழலில்,

விஜயதரணி பாஜகவுக்கு தாவபோகிறார் என்று குமரியில் பரவிய செய்தி இப்போது தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் முதல் வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான தீர்மானங்களை கொண்டு வந்த சட்டமன்ற கூட்டத்தில் விஜயதரணி பங்கேற்காதது,பரவி வரும் செய்தியை உண்மை ஆக்குவது டன்.டெல்லியில் இருக்கும் விஜயதரணி விடம் ஊடகவியலாளர் பாஜக பயணம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது கடந்து சென்ற நிலையில், டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது,

தமிழகத்தில் திருச்சி, கரூர், சிவகங்கை உட்பட நான்கு தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் இருக்கும் என்ற சூழலில். விஜயதரணி திருச்சி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக கிடைத்த கடைசி செய்தியை அடுத்து, சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்த போது, இப்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள எவருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்து, தமிழகத்தில் ஒரு இடைத்தேர்தலுக்கு வழி வகுக்க மாட்டோம் என்ற உறுதியான தகவல் கிடைத்தது.

விஜயதரணி கட்சி தாவ போகிறார் என்று தினம், தினம் பரவும் செய்திக்கு உரியவர் ‘வாய்’ திறந்தால்தான் விடை தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *