நடிகர் விஜய்யின் சிவப்பு காரின் இன்சூரன்ஸ் குறித்த சர்ச்சைகளுக்கு அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் விளக்கமளித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்த நிலையில் நடிகர் விஜய் தனது வாக்கை நீலாங்கரை வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். விஜய் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வருகை தந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் சிவப்பு காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு தற்போது விஜய்யின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் விளக்கமளித்துள்ளார். நடிகர் விஜய் வந்து வாக்களித்த கார் இன்சுரன்ஸ் மே 28 வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளார்.