• Sun. Oct 1st, 2023

இபிஎஸ் உடன் மட்டும் பேசினாரா மோடி? ஓபிஎஸ் பதில்

ByA.Tamilselvan

Nov 14, 2022

இபிஎஸ் உடன் மட்டும் பிரதமர் மோடி பேசினாரா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்
கடந்த வாரத்தில் பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகைபுரிந்தார். அவரை இபிஎஸ்.ஓபிஎஸ் இருவரும் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர் இந்நிலையில் இபிஎஸ் உடன் மட்டுமே பிரதமர் மோடி பேசியதாக ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். அதில் உதயகுமார் சொன்னது உண்மையா? பொய்யா ? என்பது என் அருகில் இருந்தவர்களுக்கு தெரியும். அது மட்டுமின்றி மோடி ,அமித்ஷாவுடன் ஆன சந்திப்பு எனக்கு திருப்தியாக இருந்தது எந்த ஒரு மனவருத்தத்திலும் நானோ , எனது ஆதரவாளர்களோ இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *