• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

‘இரவின் நிழல்’ ரிலீஸ் உரிமையினை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

பார்த்திபன் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெற்று இருக்கிறார்.

பார்த்திபன் நடித்த ‘இரவின் நிழல்’என்ற திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் உலகிலேயே முதல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்று உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது