• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவி, உதவி ஜெயிலருக்கு கொடுத்த தருமடி

ByKalamegam Viswanathan

Dec 21, 2024

பள்ளி மாணவியை படுக்கைக்கு அழைத்த மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர்; மாணவி தனது குடும்பத்துடன் சென்று நடுரோட்டில் உதவி ஜெயிலருக்கு தருமடி கொடுத்த சம்பவம்;

மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி என்பவர், மதுரை பைபாஸ் ரோட்டில் உணவகம் நடத்தி வந்த முன்னாள் சிறைவாசியின் உணவகத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் உணவகத்தில் இருந்த சிறைவாசியின் மகளிடம் பேசி பழக்கம் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறைவாசியின் பள்ளி செல்லும் பேத்தியிடமும், தனது செல்போன் எண்ணை கொடுத்து ஏதேனும் உதவி வேண்டும் என்றால் தொடர்பு கொள் என்று பழக முயன்றுள்ளார்.

மாணவி இடம் தொடர்ந்து செல்போனில் பேசி, அவர் வசிக்கும் இடத்திற்கு தனியாக அழைத்த போது, அந்த மாணவி தத்தா, பாட்டி, சித்தியிடம் கூற அனைவரும் ஒன்றாக புறப்பட்டு மாணவியை மட்டும் பாலகுருசாமி சொன்ன இடத்திற்கு தனியாக அனுப்பி வைத்தனர்.

அப்போது அந்த மாணவி அவர் சொன்ன பகுதியில் நின்று கொண்டிருந்த பொழுது மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி இருசக்கர வாகனத்தில் வந்து அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்து அந்த மாணவியிடம் 500 ரூபாய் பணத்தை கொடுத்து இரு சக்கர வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி கூச்சலிட, அங்கு மறைந்திருந்த அவரது சித்தி பளார், பளார் என்று உதவி ஜெயிலர் பாலகுருசாமியை தாக்க பள்ளி மாணவியின் தாத்தா, பாட்டி ஆகியோர் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சிறைவாசியின் மகள் மற்றும் பள்ளி மாணவி மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.