கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர், தனுஷ்! தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார்! தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது! இருவரும் மீண்டும் இணைவார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது!
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ் தனது நண்பருக்கு வாழ்த்துகள், கடவுள் ஆசீர்வதிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!