

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான மாறன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர், நடிகை ராசிகண்ணா, நடிகை, நித்தியா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள் படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
