• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அஜித் ரசிகர்களுக்கு அல்டிமேட் அப்டேட்!

நடிகர் அஜித்தின் வலிமை படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது ஏகே61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே அவரது ஏகே62 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பும் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏகே62 படமான அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்திற்கு நயன்தாரா ஜோடியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்!