• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இயக்குனராகிறார் தனுஷ்! யார் ஹீரோ?

கோலிவுட்டின் முக்கிய நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. மேலும், தற்போது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தகைய நிலையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த திரைப்படத்தில் நடிகர்கள் ரோபோ ஷங்கர் மற்றும் விஜய் டிவி ராமர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். முன்னதாக பா.பாண்டி திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.